Villa Karuna Home For Seniors

முதியோர் தமது சுதந்திரம், சௌகரியம், மன நிம்மதி என்பவற்றை பேணிக் கொள்வதற்கு அவர்களுக்கு VKSC விரிவான, மருத்துவமற்ற வீட்டுப் பராமரிப்பை வழங்குகிறது.
எமது பராமரிப்பாளர்கள் நன்கு பயிற்றப்பட்ட திறன்மிக்க, காப்புறுதி செய்யப்பட்ட, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களாவர்.

என்ன சேவைகள் நாம் வழங்குகின்றோம்?

  • போக்குவரத்து
  • உணவு தயாரிப்பு
  • இலகுவான வீடு பேணல் / உடுப்பு துவைத்தல்
  • பராமரிப்பு வழங்குதலும் / துணை இருத்தலும்
  • தனிப்பட்ட பராமரிப்பு
  • உடனிருந்து பராமரித்தல்

சுதந்திரமாக தமது வீடுகளிலேயே வாழவிரும்பும் முதியவர்களுக்காக தீர்வுகளை இயலுமான கட்டணங்களில் எமது சேவைகள் வழங்குகின்றன.

VILLA KARUNA Senior Care ஒவ்வொரு சேவை பெருநருக்கும் தனித்துவமான தேவைகள் இருக்கும் என்பதனை விளங்கிக் கொள்கின்றது. சிறந்த தகைமைகள் மட்டுல்லாது முதியவர்களின் தேவைகளுக்குப் பொருத்தமான பராமரிப்பாளர்களைக் கண்டறிதல் முக்கியம் என்பதனை நாம் நம்புகின்றோம்.

நீங்கள் எம்மை பின்வருவனவற்றிற்கு நம்பலாம்

  • நம்பகத்தன்மை
  • தனிநபருக்கேற்ப சேவை வழங்குதல்
  • தேவைக்கேற்ப வளைந்து கொடுத்தல்
  • பொறுப்புணர்வு
  • பதிலளித்தல்

எம்மால் வழங்கப்படாத சேவைகள் யாவை ?

  • மருந்துகளை எழுதித் தரல் அல்லது கொடுத்தல்
  • எந்த விதமான ஊசிமருந்துகளையும் ஏற்றல்
  • தொழில் தாதி பராமரிப்பு
  • அதிக பாரங்களைத் தூக்குதல்

எவ்வாறு எம்மை தொடர்பு கொள்வது ?

எம்மை 416-266-6473 இலக்கத்தில் அழையுங்கள் VILLA KARUNA SENIOR CARE'ஐச் சேர்ந்த விண்ணப்ப அலுவலர் ஒருவர் உங்கள் வீட்டிலேயே உங்களை சந்திக்கும் ஒரு ஆரம்ப நேர்முகம் ஏற்பாடு செய்யப்படும். எமது சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் கேள்விகள் கேட்கவும் சேவைகளின் விலைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக இந்த சந்திப்பு அமையும்.

எம்மை அணுகுவதற்கான முதல் மூன்று காரணிகளாவன

  • சுதந்திரம்
  • சௌகரியம்
  • மன நிம்மதி

முதியவர்கள் உன்னதமான வாழ்க்கைத் தரத்தை அடைய உதவுவதே எமது இலட்சியமாகும்.